இவை
சொல்ல முடியாத
சோகங்களின்
சேகரிப்பின் சுருக்கம் மட்டுமே !
நேரம் ஆகிவிட்டது!
தூரத்தில் அரட்டையடிக்கும்அலுவலர்கள்
எங்கள் மீது அமர்ந்துபணியாற்ற
தாங்களாய் ஏன்இன்னும் வரவில்லை ?
அரசு அலுவலக நாற்காலிகள்!
கும்பிட வந்தவர்கள்
நம்புகின்ற எங்களை
நிர்கதியாய் வெளியேகழற்றிவிட்டுவிட்டு
தர்ம்மமின்றி உள்ளேசென்றுவிட்டார்களே !
நாங்கள் செய்ததவறுதான் என்ன ?
காலம் காலமாய்
வாயிற்படியில்வருந்திக்
கிடக்கும் செருப்புகள்!
நிம்மதியாய் வாழவிடாமல்,
எங்களை அம்மணமாக்கி,
கண்ட இடங்களில்மண்டி யிடவைடவத்து
தண்டனைத் தருகிறீர்களே?
தெருவெங்கும் தங்கள்
சருமம் தெரியகூனிக்குறுகி
தேக்கமாகி துர்நாற்றம்வீசும்
சாக்கடைகள் !
நம்பினால் நலம்தரும் என்னை
அம்புகளால் துளைப்பதுபோல்
அலட்சியம் செய்துவிலக்கி வைக்கின்றார்களே
அழைத்தால் ஓடோடிவரகாத்திருக்கும்
உழைப்பின் ஏக்கங்கள்!
ஐயோ தாங்கமுடியவில்லையே
தயைகூர்ந்து எங்களைவிட்டுவிடுங்கள்
ஓய்வெடுக்க முதுமையிலும்எங்களுக்கு
விடுப்பும் வாய்ப்பும்கிடையாதா ?
தஞ்சமடைந்த தம்பதிகளான
லஞ்சமும் ஊழலும்!
நண்பர்களே.. இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களையும்,வாக்குகளையும் பகிர்ந்து விட்டுப்போங்களேன்..





















